Friday, January 22, 2010

காதல் புகழாரம்.

காந்த சிந்தனை நிறைந்த என் மனதில்
இரும்பு துகள்களை போல் கவரப்பட்டு நிறைந்திருபவளே,

வடக்கிலிருந்து தெற்கிற்கு பாயும் காந்த அலைகளை போலில்லாமல்
உன் சிந்தனை தோன்றும் திசையாவிலும் பாயும் என் உணர்வுகள் தான் காதலோ!!

அறிவியலையும் என் தாய் தமிழையும் அறிந்தளவுக்கு
இந்த காதலை அறியாமல் போயினும், இயல்பிலே
உன்னை கவர தோன்றும் இந்த நேசம் தான் காதலோ! !

கவிஞர் பலர் இந்த காதலை வர்ணிக்கும் வேளையில் நான் மட்டும் இந்த காதலை புரிந்து கொள்ள முயல்கிறேனே!
இது என் அறியாமையோ? -அல்ல
தேனின் இனிமையை உணரமுடியாத அந்த தேனின் தவிப்பை போன்றதோ!!

என்னவாயினும் சரி, இரு மலர்களில் இருக்கும் தேன்களை இணைத்த பெருமை, தேனீ போன்ற அந்த காதலுக்கே!!

ஏய் தேனீ காதலே, நீ பல்லாண்டு வாழ்க!
உன்னால் பல தோட்டங்கள் இணையும்...
பின் ஊர்கள் இணையும்...
பின் நாடுகள் இணையும்...
உலகம் ஒன்றாகும்...
ஆகையால், நீ இனி சிவப்பு காதல் அல்ல, வெண்ணிற காதல்.
மீண்டும் வாழ்த்துகிறேன், நீ வாழ்க, வாழ்க, வாழ்க.
- John Bosco Vijay Anand
(non-கவிஞன்).