Wednesday, September 23, 2015

பெருகிவா காவேரி


அன்றைக்கு உன்னை கடக்க ஓடம்
இன்றைக்கு உன்னை கடபதர்க்கு செருப்பு!


                              - யாரோ ஒரு கவி 

நீ வருவாயென

பூத்த கண்ணோடும், புன்மனதோடும் … காத்திருக்கும் , புது கவிஞன் ஒருவன் இவ்வாறு  பாடுகிறான்:

காவேரி, நீ நலமா?
கடிதத்தில் நாங்களெல்லாம் நலமென்று உன்னிடத்தில் நவிழ தான் ஆசையடி!
நீ இல்லா தமிழகம் - நிலவில்லா நீல்வானம்
தாயில்லா வீடு, தமிழில்லா  இசை பாடல்
ஆகையால் இம்மடல் அவசரமாய் வருகிறது காவேரி
தாகம் எங்களுக்கும் தமிழுக்கும் கூடத்தான்
என்ன காரணம் - நீ ஏன் வர மறுக்கின்றாய் காவேரி?

உன்னை காணமல் உளம் உருக எழுதுகிறோம் காவேரி தாயே
 வான் பொய்த்த போதும் நீ பொய்யா என்றார், ஏன் பொய்த்தாய் காவேரி!
இது சரியா  காவேரி!
பச்சை பியர் கருக, பகிரென்ரு தரை பிளக்க உச்சி கதிர் உயிரை உருஞ்சுதடி, காவேரி
குடைமலை கைகாரி, கோபம் என்ன!
அருளையெல்லாம் அடகு வைத்துவிட்டாயோ, ஆருயிரே காவேரி !

பாலாறு தமிழகத்தில் பாலாறாய்  போனது போல் மேலும் ஒரு பாலாறாய் மெலிவாயோ காவேரி!
புனலோடும் தமிழகத்தில், புதிய வரலாறாய் மணலோட செய்தாயோ மாதரசி காவேரி!
புனலோட்டம் நேற்றைக்கு, மனலோட்டம் இன்றைக்கு, கனலோடம் நாளை என்ற கதை சரியா காவேரி!
தஞ்சையெல்லம் புஞ்சை, தமிழ்நாடு பாலைவனம், பஞ்சையர்கள் நாங்கள், இப்பழி உனக்கோ காவேரி!
தண்ணீரை பாராமல் தவிக்கின்ற தஞ்சை மகள் கண்ணீரால் கடல் உப்பு கூடுதடி காவேரி!

பிறந்த இடம் போதும் என்றென்னும் பெண்ணா நீ!
மங்கையர்க்கு சிறந்த இடம் புகுந்த இடம் - இதை நீ அறியாயோ காவேரி
தாய்வீடிற்கே பெண்கள் தனியுடைமை எனச்சொன்னால் சேய்யுண்டோ? - ஆண்கள் என்ன செய்வார்கள் காவேரி!
இமயமலை என் தண்ணீர் எனக்குதான் சொந்தம் எனச்சொன்னால் சமவெளிகள் நிலையென்ன - சஹாராவா காவேரி!

நதிக்கு விலங்கிட்டு நடுவழியில் சிறையிட்டால் குதிக்கும் இயல்பு குறைந்திடுமோ காவேரி!
ஓடினால் ஓடை உட்கார்தால் நீ குட்டை பாடிவர வேண்டமா, நீ பறந்து வா காவேரி!
கண்ணகிக்கு பாலூட்டி காவியத்தை வளர்த்தவளே
பெனுரிமையை நிலைநாட்ட பெருகிவா காவேரி!

காற்றுக்கு கைவிலங்கு போட்டவர்கள் கிடையாது - ஆற்றுக்கும் அப்படிதான் அடக்குமுறை பலிக்காது!!
உன்னை விடுவிக்க முடியா திறமையிழந்த தமிழனாய்  எங்கி நிற்கிறேன்
மண்ணின் தவிப்புக்கும் மக்கள் கொண்ட தவிப்புக்கும் நீயே  பதிலாய்  நேரில் வர வேண்டும் காவேரி!
-------------இப்படிக்கு உன்னை மறந்தரியாத மூத்த தமிழ் மக்கள்.
                    யாரோ ஒரு கவி  - ( AUTHOR UNKNOWN)