Thursday, November 18, 2010

அறிவியல்பால் வர்ணனை

காதலை வர்ணிக்கும் வேலையில் அறிவியல்பால் சிந்தியாமை என் தவறோ ?
இடுக்கண், தேய்பிறை நிலவு போலென்னையாகிய வேலையில்
என் காதலி எனக்காய் ஒரு சொட்டு கண்ணீர் கூட வடி
க்காததை கேட்பின்,
நீர் தானே என்னை திங்கள்
முகமென வர்ணித்தீர்!
திங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை என்பதை அறிந்ததில்லையோ
யேன எதிர்வினைதாள்!
- John Bosco Vijay Anand
(non-கவிஞன்).

நொந்தழுதாள், தமிழ் தாய்!

நற்றமிழ் நாவலனாய்!
பைந்தமிழ் புலவனாய்!
செந்தமிழ் சொல்லனாய்!
முத்தமிழ் மூதறிஞனாய்!
தேன்தமிழ் தொண்டனாய்,
அடையலாம் கொல்ல முயன்று தோற்பினும்
கவலையடையாதவள், என் இன ஈழ கூடப்பிறவானை
காக்க முயலாதலால். சிந்தை நொந்தழுதாள், தமிழ் தாய்!
- John Bosco Vijay Anand
(non-கவிஞன்).

Sunday, November 14, 2010

நார்ச்சந்தியர் - சிலேடை

நார்சந்தியில் நிற்பார்!
உற்று பார்த்தால் முறைதிடுவர்!
ஓடினால் துரதிடுவர்!
மொத்தத்தில் காவலரும் கடி நாயும் ஒன்றே காண்!
- அலெக்சாண்டர் சகாயராஜ்
( தாய் மாமன் )

Thursday, November 11, 2010

பால் குறுதி குடியோன் - சிலேடை

நாற்கால் பிராணி என்பர் !
தேன்மொழியில், இரண்டெழுத்து பெயர் உடையான்

மறைந்து பதுங்கி தாக்கும் இதிகாச இராமன் போல் கீழ்எண்ணம் உடையுனும்!
வீர மரணத்தை பரிசளிப்பான்,வாலையாட்டி எச்சரித்தும், புறக்கணிப்பின்.
பெரும்தொகை மனித இனம் இவைபோல் வீட்டினுள் அல்லது வெளியில் செயல்படும்!
இன வேறுபாடுகளை களைந்து காட்டும் இவைகளை புலியன் - பூனையர் என்பர்.
- John Bosco Vijay Anand
(non-கவிஞன்).

Friday, January 22, 2010

காதல் புகழாரம்.

காந்த சிந்தனை நிறைந்த என் மனதில்
இரும்பு துகள்களை போல் கவரப்பட்டு நிறைந்திருபவளே,

வடக்கிலிருந்து தெற்கிற்கு பாயும் காந்த அலைகளை போலில்லாமல்
உன் சிந்தனை தோன்றும் திசையாவிலும் பாயும் என் உணர்வுகள் தான் காதலோ!!

அறிவியலையும் என் தாய் தமிழையும் அறிந்தளவுக்கு
இந்த காதலை அறியாமல் போயினும், இயல்பிலே
உன்னை கவர தோன்றும் இந்த நேசம் தான் காதலோ! !

கவிஞர் பலர் இந்த காதலை வர்ணிக்கும் வேளையில் நான் மட்டும் இந்த காதலை புரிந்து கொள்ள முயல்கிறேனே!
இது என் அறியாமையோ? -அல்ல
தேனின் இனிமையை உணரமுடியாத அந்த தேனின் தவிப்பை போன்றதோ!!

என்னவாயினும் சரி, இரு மலர்களில் இருக்கும் தேன்களை இணைத்த பெருமை, தேனீ போன்ற அந்த காதலுக்கே!!

ஏய் தேனீ காதலே, நீ பல்லாண்டு வாழ்க!
உன்னால் பல தோட்டங்கள் இணையும்...
பின் ஊர்கள் இணையும்...
பின் நாடுகள் இணையும்...
உலகம் ஒன்றாகும்...
ஆகையால், நீ இனி சிவப்பு காதல் அல்ல, வெண்ணிற காதல்.
மீண்டும் வாழ்த்துகிறேன், நீ வாழ்க, வாழ்க, வாழ்க.
- John Bosco Vijay Anand
(non-கவிஞன்).